சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முறையில் புதிய நடைமுறை

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் சாரதி அனுமதி பத்திரம் வழங்குவதற்கு புதிய முறை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து மற்றும் கனரக வாகன சாரதி அனுமதி பெறும் நபர்கள் ஒரு மாத காலப்பகுதிக்குள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளார்களாக என ஆராயப்படவுள்ளனர்.

ஜனவரி மாதம் முதலாம் திகதி இந்த விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கனரக வாகனங்களின் சாரதிகள் மற்றும் பேருந்து சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனம் ஓட்டுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • Recent
Scroll to top