கால் போத்தல் மதுபான பிரியர்களுக்கு மேலதிக கட்டணம்

மதுபான விற்பனை நிலையங்களில் போத்தல்களை விற்பனை செயய்யும் போது வைப்பீட்டு கட்டணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்றால் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நேற்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கால் போத்தல் மதுபானதிற்காக பெறப்படுகின்ற வைப்புக் கட்டணமானது, வாடிக்கையாளர்கள் அந்த கட்டணத்தை மீண்டும் பெறத் தூண்டும் வகையிலான கட்டணமாக இருக்கவேண்டும் என்றும் அங்கு தீர்மானிக்கப்பட்டது.
பெற்றுக்கொள்ளப்படும் வைப்பு கட்டணம் எவ்வளவு என்பது சம்பந்தமாக இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. என்பதுடன், சுற்றாடல் அமைச்சு குறித்த திணைக்களத்துடன் கலந்துரையாடி முடிவுக்கு மேற்கொள்ளவுள்ளது..

இந்த கலந்துரையாடலில் மதுபான தயாரிப்பு நிறுவனம், கலால் ஆணையாளர் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் முன்வராத பட்சத்தில் கட்டாயமாக கால் போத்தலை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

கால் போத்தல் மதுபான பாவனையின் மூலம் சூழல் மாசடைந்திருப்பதாக சூழல் ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் வருடாந்த போத்தல் உற்பத்தியின் எண்ணிக்கை 120 மில்லியன் ஆகும். அதில் 18 மில்லியனுக்கும் 20 மில்லியனுக்கும் இடைப்பட்ட அளவு போத்தல்கள் மதுபானத்திற்காக பயன்படுத்தப்படுகிறன. இவற்றுள் 60 வீதத்திற்கு மேற்பட்டவை மீள் சுழற்சி செய்யமுடியாது என்பது தெரியவந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

  • Recent
Scroll to top