கொரோனாவுக்கு பயந்து இளைஞன் செய்த வேலை – உயிர் பிரிந்தது

குருணாகல் பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பேருந்தில் தொழிலுக்கு செல்வதற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த இளைஞன் அண்மையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

பணி நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்து மூன்றாவது பயணத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் சிவில் பொறியியலாளராக பணியாற்றும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  • Recent
Scroll to top