இலங்கையில் சுவாரஸ்யம் – அமைச்சர் தந்தைக்கு சல்யூட் அடித்த பொலீஸ் மகன்

அமைச்சரான ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிற்கு, பொலிஸ் அதிகாரியான அவரது புதல்வர் சசித்ர வீரசேகர சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ளார்.
பொதுப்பாதுகாப்பு மற்றும் உள்விவகார அமைச்சராக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று பத்தரமுல்ல சுஹ_ருபாயவில் அமைந்துள்ள காரியாலயத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை நேற்று ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் அவரது புதல்வர் பொலிஸ் அதிகாரியாக கலந்து கொண்டிருந்தார். துணை பொலிஸ் அத்தியட்சகரான சசித்ர தனது தந்தையும் அமைச்சருமான சரத் வீரசேகரவிற்கு, அமைச்சருக்கு வழங்கும் மரியாதை முறைமைகளின் அடிப்படையில் சல்யூட் அடித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்னவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.