மரணதண்டணை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வருடங்களுக்கு அமைய பொது மன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போது ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 116 கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் நபர்களுக்கு பொது மன்னிப்பும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 25 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சாதாரண கைதிகளுக்கு வழங்கும் பொது மன்னிப்பையும் வழங்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இந்த கைதிகளின் விபரங்கள் அடங்கிய பட்டியல் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலுக்கு தீர்வாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

  • Recent
Scroll to top