வெறியில் பாம்போடு விளையாடிய வல்வெட்டித்துறை நபர் பலி

மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் வல்வெட்டித்துறையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் வீட்டுக்கு வந்த குறித்த நபர், நாக பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். சில நிமிடங்கள் கழித்து அதனை அயலில் உள்ள வளவில் வீசிவிட்டு தூக்கத்துக்குச் சென்றுள்ளார்.

தூக்கத்தால் திடீரென எழுந்த அந்த நபர், நெஞ்சு வலிப்பதால் தண்ணீர் கேட்டுள்ளார்.தண்ணீரை அருந்திய அவர், நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து பருத்தித்துறை – மந்திக்கை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது கையில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுகின்றது என்று ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மந்திகை வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  • Recent
Scroll to top