கல்வி வலயம் ஒன்று அதிரடியாக மூடப்படுகிறது

தம்புள்ளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தம்புள்ளை மாநகரசபை மேயர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் குறித்த பாடசாலைகள் நாளை முதல் எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கொரோனா தொற்று அச்சம் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.