PCR முடிவுகளுக்கு முன்னர் பாடசாலை வந்த மாணவன்

தனது PCR பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்கு முன்னர் மாணவன் ஒருவர் பாடசாலைக்கு வந்தமையினால் பெற்றோர் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் நேற்று முன் தினம் பாடசாலைக்கு வருகைத்தந்துள்ளார். குறித்த மாணவனின் வருகையால் நேற்றைய தினம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மாணவர் நேற்று முன்தினம் பாடசாலை வகுப்பறையில் இருந்த நிலையில் அவர் ஒருகொடவத்தை பிரதேசத்தில் இருந்து வருகைத்தந்ததாக தெரியவந்துள்ளமையினால் மீண்டும் அந்த மாணவரை வீட்டிற்கு அனுப்புவதற்கு அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அந்த மாணவர் அண்மையில் ஒருகொடவத்தையில் இருந்து வட்டவல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் கினிகத்தேன வீதியில் அவர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய குறித்த பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு கிடைத்துள்ளது. எனினும் அதற்கு முன்னரே மாணவனை வீட்டிற்கு அனுப்புவதற்கு அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய மாணவன் தற்போது ஹம்பாந்தோட்டை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மாணவன் சென்ற பாடசாலை கிருமி நீக்கம் செய்யப்பட்டதுடன். அவருடன் நெருங்கி செயற்பட்ட 19 பேர் தனிமைப்படுது்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள், ஆசியர்கள் மற்றும் அதிபருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • Recent
Scroll to top