சாராய, சிகரெட் பிரியர்களுக்கு அதிர்ச்சி

மதுபான வகைகள், பியர் வகைகள் மற்றும் சிகரெட் என்பனவற்றுக்கான விலைகள் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுபான வகைகள், பியர் வகைகள், தொடர்பாடல் சேவைகள், பந்தயங்கள் மற்றும் சூதாட்டங்களுக்கும் மோட்டார்வாகனங்களுக்கும் புதிய பொருட்கள் சேவைகள் வரி விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மையில் பிரதமர் மஹிந்த ரஜபக்ச சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த புதிய வரி அமுல்படுத்தப்படும் என நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் வார இறுதி ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த பொருட்கள் சேவைகள் வரி எத்தனை விகிதத்தில் விதிக்கப்படும் என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

விரைவில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் காலங்களில் ஒரே வரியை விதிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

  • Recent
Scroll to top