திங்கள்கிழமை முதல் பாடசாலை வகுப்பறையை இப்படி பிரிக்க வேண்டுமாம்

வரும் 23.11.2020 திங்கட்கிழமை பாடசாலைகல் மீளத் திறக்கப்படும் என கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை எப்படி திறக்கவேண்டும் என்ற அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவை வருமாறு

15 பிள்ளைகளுக்கு குறைந்த வகுப்பறைகளை தினமும் நடாத்திச் செல்ல வேண்டும்

15 தொடக்கம் 30 வரையான பிள்ளைகளை கொண்ட வகுப்பறை எனின் இரண்டு வகுப்பாக பிரித்து கிழமைக்கு ஒரு வகுப்பு என நடாத்த வேண்டும்.

30 க்கு மேற்பட வகுப்பு எனின் 15 பிள்ளைகள் கொண்ட வகுப்புக்களாக பிரித்து நடாத்தவேண்டும்

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Recent
Scroll to top