சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரம் செய்த 29 பேரின் கதை

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், வீதியில் இறப்பதாக சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்ட 29 நபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றிய நபர்கள் வீதிகளில் இறப்பதாக திட்டமிட்டு சிலர் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவர்களில் வெளிநாடுகளில் உள்ள சிலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏனையோர் இலங்கையில் இருப்பதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொய்ப் பிரசாரங்களை செய்த இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் சம்பந்தமாக குற்றவியல் விசாரணை திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

  • Recent
Scroll to top