இலங்கையில் கொரோனா மரணம் 69 ஆனது

இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் (18) சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மூவரின் மரணம் இடம்பெற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 69 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

01. கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் நபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளாமையுடன் நீரிழிவு நோயின் சிக்கல் நிலைமை ஏற்பட்டதாகும்

02. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண் ஆவார். கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளாமை இனங்காணப்பட்டு ஹேமாகமை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த வேளையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் அதியுயர் இரத்த அழுத்தம் நிரிழிவுடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளாமையினால் நுரையீரல் பலவீனப்பட்டமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

03. கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஆண் நபர். வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோயின் சிக்கல் நிலை கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளாமையினால் அதிகரித்தமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Recent
Scroll to top