தாய் வயது பெண்ணுடன் லொட்ஜில் ஒதுங்கிய இளைஞன் – கொலை வழக்கில் சிக்கினான்

பொலன்னறுவை நகருக்கு அருகில் அமைந்துள்ள சுற்றுலா தங்குமிட விடுதி ஒன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவுல லெனதொர, சேருதண்டாபொல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான எம்.எம்.கமலா ரஞ்சனி என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண் மறைமுக தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இளைஞனுடன் நேற்று இரவு விடுதிக்கு வந்து அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

பின்னர் அந்த இளைஞன் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் இன்று காலை பக்கமுன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

25 வயதான இந்த இளைஞன் பக்கமுன திக்கல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • Recent
Scroll to top