கொழும்பு மக்களுக்கு இராணுவத் தளபதி விடுக்கும் அறிவுறுத்தல்

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையிலான நடமாட்டங்களை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா கோரியிருக்கிறார்.

அதேநேரம் நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் அவசர காலங்களில் தவிர வேறு பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

பொதுமக்கள் தங்கள் நகர்வுகளை தங்கள் பகுதிகளுக்கு மட்டுமே முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று மாகாணங்களுக்கு இடையிலான பகுதிகளுக்கு பரவுவதைத் தவிர்ப்பதற்காக மேல் மாகாண மக்கள் மாகாணத்திற்கு வெளியே பயணம் செய்வதைத் தடைசெய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்திற்குள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் பங்களிப்பு இந்த நேரத்தில் மிக முக்கியமானது என்று சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், வார இறுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு விதிக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

  • Recent
Scroll to top