கொரோனா தடுப்பூசி கிடைத்தாலும் இலங்கை எதிர்நோக்கப்போகும் நெருக்கடி

கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி குறித்த விடயம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருவதால், தடுப்பூசி கிடைக்கும் காலம், செலவு மற்றும் பல காரணிகளைக் கருத்தில் கொண்டு இலங்கை இத் தடுப்பூசியில் மட்டும் தங்கியிருக்க முடியாது என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், இந்த வகையான தொற்றுநோய்களில், வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார். தடுப்பூசி என்பது வைரஸ்ஸை கட்டுப்படுத்தும் ஒரு முறை மட்டுமே என்று அவர் கூறினார்.

“இன்னும் தடுப்பூசி ஆராய்ச்சியில் உள்ளது, எனவே தடுப்பூசி பெற குறைந்தபட்சம் இன்னும் ஆறு மாதங்கள் ஆகும்” என்று டாக்டர் சமரவீரா கூறினார்.

இலங்கைக்கு ஒரு தொகுப்பு தடுப்பூசி தொகுதி கிடைக்கும்போது அது மானியமாக வழங்கப்படும் என்றாலும், மேலதிகமாக தேவையான தடுப்பூசி கருவிகளை அரசாங்கத்தால் வாங்க வேண்டும், அதற்கு நிறைய செலவாகும். “தற்போது கிடைக்கும் விலைகளின்படி, ஒரு தடுப்பூசியின் விலை ரூ. 1,500 முதல் ரூ. 4,500, என்றார்.

தடுப்பூசி குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, தடுப்பூசியின் ஆரம்ப செலுத்துகையை தொடர்ந்து ஒன்றரை வருட காலத்திற்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கும் என்று தொற்றுநோயியல் தலைவர் கூறினார்.

எனவே, தடுப்பூசி ஒரு நபருக்கு ஆண்டுக்கு ஒரு முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை வழங்கப்பட வேண்டும். மேலும், இது தடுப்பூசிக்கு அதிக தேவையை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

“அதே நேரத்தில், ஒரு சக்திவாய்ந்த நாடு அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி கருவிகளை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது, இது தடுப்பூசியின் பற்றாக்குறையை உருவாக்கும்,” “இது நடப்பதைத் தடுக்க, உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசி கருவிகளை நாடுகளிடையே விநியோகிக்க ஒரு பொறிமுறையைத் தயாரிக்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.

  • Recent
Scroll to top