கொழும்பில் இருந்து வெளியேற உடனடி தடை

மேல் மாகாணத்திலிருந்து எவரும் வெளியிடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ம் திகதி வரையில் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட மேல் மாகாணத்திலிருந்து எவரும் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் மாகாணத்திற்குள் எவரும் பிரவேசிப்பதற்கு அனுமதியுண்டு என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சாவேந்திரா சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது.

  • Recent
Scroll to top