அரச ஊழியர்களின் உடையில் ஜனவரி 2021 இல் வரும் மாற்றம்

அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதற்குரிய வேலைத்திட்டம் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கையின் புடவை உற்பத்திக் கைத்தொழிலில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, நாடெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்புக் கலைஞர்களின் துணையுடன் புதிய வடிவங்களை அறிமுகம் செய்யவுள்ளோம்.

எதிர்காலத்தில், பத்திக் ஆடை வடிவமைப்பாளர்களை பயிற்றுவித்து, அவர்களுக்கு என்.வி.கியூ சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

துறை சார்ந்தவர்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

  • Recent
Scroll to top