புதிய அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர்களை மாற்றவுள்ள அதிபர்

இலங்கை அமைச்சரவையில் விரையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலரின் பதவிகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிய வருகிறது.

எதிர்வரும் வாரம் இந்த அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதென சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

20ஆம் திருத்தத்தின் பின்னர் அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இதற்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தது.

20ஆம் அரசியலமைப்பிற்கு அமைய இலங்கை அதிபர் தான் விரும்பியதனை போன்று அமைச்சரவையை மாற்றிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Recent
Scroll to top