சீனிக்கான அதிகபட்ச விலை இதுதான்! வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

சீனிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதியிடப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் சில்லறை விலை 90 ரூபா எனவும், பொதியிடப்படாத ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 85 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சீனியின் மொத்த விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு 80 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி வரி தளர்த்தப்பட்ட போதிலும் அதன் நலன்கள் நுகர்வோரைச் சென்றடையவில்லை என அண்மைய நாட்களில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • Recent
Scroll to top