மாவட்டங்கள் இடையிலான போக்குவரத்து தடை ஆகும் நிலையில்?

மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களை தடை செய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அரசாங்கத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்துத் தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் தற்பொழுது முடக்கப்பட்டுள்ள பகுதிகள் ஒரு வார காலம் வரையில் முடக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முடக்கப்பட்ட பகுதிகளுக்கு இடையில் மற்றும் அந்தப் பகுதிகள் ஊடாக பயணம் செய்வதற்கு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென சுற்று நிரூபமொன்றை பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரட்ன வெளியிட்டுள்ளார்.

  • Recent
Scroll to top