சோகம்: கொரோனா மரணம் 41 ஆனது

இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே நான்கு பேர் இன்று (10) உயிரிழந்த நிலையில், ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆண்  ஒருவர் இன்று வீட்டில் உயிரிழந்ததுடன் ராகம வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த நோயாளி கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

பிரேத பரிசோதனையில் உயிரிழப்பதற்கு காரணம் நீண்டகால புற்றுநோய் நிலைமையில் கொவிட் 19 நோய் தொற்று நிலை தீவிரமடைந்தமையேயாகும். .

இதற்கமைவாக இது வரையில் இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களில் மரணித்த மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 41ஆகும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

  • Recent
Scroll to top