இலங்கையின் 20% பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து – ஏனையோருக்கு?

இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்தை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்குரிய விடயங்களை ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இன்று அமைச்சர் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள். இதில் தேவையான நிதியைப் பெறுவது, தடுப்பு மருந்து பெற வேண்டியவர்களைத் தீர்மானிப்பது உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்வதற்காக குழு நியமிக்கப்பட்டது.

  • Recent
Scroll to top