இலங்கையில் அபாய பொருளாக மாறியுள்ள பணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பண பரிமாற்றத்தை குறைத்துக் கொள்வது முக்கியமான விடயமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அவதானம் செலுத்துமாறு சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

பண பரிமாற்றத்தின் பின் கைகளை சுத்தமாக கழுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எடுப்பட வேண்டிய மிக முக்கியமான நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணம் மாத்திரம் அல்ல பொருட்கள் பகிரும் போது சுகாதார முறையை பின்பற்றுவது முக்கியமாகும் என வைத்தியர் சமந்த ஆனந்த மேலும் தெரிவித்துள்ளார்.

  • Recent
Scroll to top