இலங்கையில் வெளிப்பட்ட 90’s kids இன் பரிதாப நிலைமை

வாழைச்சேனையில் ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட வழிப்பிள்ளையார் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனக்கு நீண்ட காலமாகியும் அரச உத்தியோகம் கிடைக்கவில்லையென்றும் மற்றும் திருமண விடயமும் சரிவராத காரணத்தினால் வழிப்பிள்ளையாரை கட்டிப்பிடித்து மனவேதனையில் அழுததாகவும் இதன்போதே பிள்ளையார் சேதமாகியதாக சந்தேகநபர் தனது வாக்கு மூலத்தினை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.

70 வருட கால பழமை வாய்ந்த இரண்டரை அடி உயரமுள்ள குறித்த சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சமபவம் தொடர்பாக மட்டக்களப்பு தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேற்று மாலை வந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

  • Recent
Scroll to top