கொரோனாவுடன் வாழுவோம் – சியேர்ஸ்

அனைவரும் கொரோனாவுடன் வாழ பழகுங்கள் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

உலகின் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டு இதுவரை எவ்வித மருந்து அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் உலகின் ஏனைய நாடுகள் கொரோனாவுடன் பயணிக்கின்றனர். வெளிநாட்டு மக்கள் கொரோனாவுடன் போராடுவது மெஜிக் அல்ல.

உங்களுக்கு கொரோனா தொற்றவில்லை என்றாலும் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடியுங்கள்.

உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை தினமும் பின்பற்றுகள். வெளியே சென்று வீடு திரும்பும் போது கொரோனாவை கொண்டு செல்ல வேண்டாம்.

கொரோனாவுடன் எங்களால் வாழ முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • Recent
Scroll to top