அதிர்ச்சி – 20 குழந்தைகள், 12 தாய்மார்களுக்கு கொரோனா

பொரளையில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் இடம்பெற்ற பரிசோதனையில் இருபது குழந்தைகள் மற்றும் 12 தாய்மார்கள் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவமனை இயக்குநர் ஜி.விஜேசூரியா தெரிவித்தார்.

மருத்துவமனையின் மருத்துவர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மருத்துவமனையில் இருந்து மருத்துவர் வைரஸ் தொற்றுக்கு உற்படவில்லை என்று இயக்குனர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றிய மருத்துவரின் நெருங்கிய தொடர்பு கொண்ட மேலும் இரண்டு மருத்துவர்களும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவதற்கு தேவையற்ற முறையில் பயப்படத் தேவையில்லை என்றும், மருத்துவ சேவைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் உறுதியளித்தார்.

“எந்தவொரு குழந்தைக்கும் நோய் இருந்தால், அவர்களின் நிலை அதிகரிப்பதற்கு முன்பு அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வாருங்கள்” என்று அவர் அறிவுறுத்தினார்.

  • Recent
Scroll to top