இலங்கையில் கொரோனா மூன்றாம் அவதானிப்பு மட்டத்தில்?

மேல் மாகாணத்தில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும், கொரோனா பரவலின் மூன்றாம் அவதான மட்டத்திற்கு இலங்கை வந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனால் 55 துறைகள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, தாதி, போக்குவரத்து, வாடகை சேவை, பயன்பாட்டு சேவைகள், அரச அலுவலகங்கள், தனியார் சேவைகள், பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், ஆடை விற்பனை நிலையங்கள், விவசாயம், பொருளாதார மையங்கள், பேக்கரிகள், வீதியோர விற்பனைகள், நடமாடும் விற்பனைகள் உட்பட 55 துறைகளுக்கு இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அசேன குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒன்றரை மீற்றர் தூரத்தில் ஒவ்வொருவரும் பயணிக்க கூடிய முறையில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களை திறந்து வைப்பதற்கு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

நிர்மாண நடவடிக்கைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள், மேலதிக வகுப்புகள், உட்புற விழாக்கள், வெளிப்புற விழாக்கள், பொதுக் கூட்டங்கள், திரையரங்குகள், குழந்தைகள் பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், திருவிழாக்கள், கடற்கரை விருந்துகள், நீச்சல் குளங்கள், கேசினோக்கள், மசாஜ் நிலையங்கள் மற்றும் தங்குமிடம் வழங்கும் இடங்கள் போன்றவற்றை தொடர்ந்து மூடி வைப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

  • Recent
Scroll to top