எதிர்வரும் 9ம் திகதி கொழும்பு திறக்கப்படும்?

எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னர் மேல் மாகாணத்தை திறப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (05) காலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விரைவில் நாட்டைத் திறப்பது மிகமுக்கியமானது. மிகவும் அடர்த்தியான மேற்கு மாகாணத்தில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவுவதை குறைப்பதற்காக தொடர்ந்து 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.

பி.சி.ஆர் சோதனைகளை 10 நாட்களுக்குள் மேற்கொள்ளவும், வைரஸ் பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் எங்களுக்கு ஜனாதிபதி மிகவும் தெளிவாக ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி 9 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு பின்னர் மேல் மாகாணத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு தொடர்ந்து இதனை முன்னெடுப்பதற்கான எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை.

இம்முறை வைரஸ் ஆனது, சுகாதார அமைச்சு கூறும் பிரகாரம் நாம் அணியும் முகக்கவசம் தவறுதலாக அணியப்பட்டால் கூட வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.மேற்கு மாகாணத்தில் தற்போதைய ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 09 ம்திகதி காலை 05.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்க வேண்டுமாயின் அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்கு மாகாணத்தில் தற்போதைய ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 09 ம்திகதி காலை 05.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • Recent
Scroll to top