அரச வைத்திய அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை – காதுகொடுக்குமா அரசு?

சுகாதார அமைச்சின் தொழிநுட்ப குழுக்களில் செயற்பாட்டு ரீதியான பங்களிப்புகளில் இருந்து விலக போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா நோய் பரவலை ஜீ.பி.எஸ் தொழிநுட்பத்தின் கீழ் வரைப்படமாக்கும் நடவடிக்கைகளை இந்த வாரத்திற்குள் மேற்கொள்ளவில்லை என்றால் தமது சங்கம் இந்த தீர்மானத்தை எடுக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

இதனை செய்யவில்லை என்றால், நாங்கள் தொழிநுட்ப குழுக்களில் இருப்பதில் அர்த்தமில்லை என்பதால் சங்கத்தின் நிறைவேற்று குழு கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

தினமும் அடையாளம் காணப்படும் நோயாளிகள் தொடர்பில் வரைப்படத்தை உருவாக்கினால் மாத்திரமே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சரியான தீர்மானத்தை எடுக்க முடியும்.

இந்த வரைப்படம் புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருக்க வேண்டியது சரியான நடைமுறை. கொரோனா நோயாளிகள் கண்டறியப்படும் விதத்தை ஜீ.பி.எஸ் தொழிநுட்பத்தின் கீழ் வரைப்படமாக்கினால், நாட்டில் அதிகமான ஆபத்து காணப்படும் மாகாணம், மாவட்டம், பிரதேச செயலாளர் பிரிவுகள், கிராம சேவகர் பிரிவுகள் என்பவற்றை சரியாக அறிந்து, அந்த பகுதிகளை தனிமைப்படுத்துவது தொடர்பான தவறின்றிய தீர்மானத்தை எடுக்க முடியும் எனவும் மருத்துவர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

  • Recent
Scroll to top