மனச்சாட்சியின்றி வீதிகளுக்கு துரத்தப்படும் வைத்தியசாலை ஊழியர்கள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியற நேரிட்டுள்ளது.

வாடகை வீடுகளில் தங்கிருந்து பணிக்கும் ஊழியர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது

வாடகை வீடுகளை விட்டு வெளியற நேரிட்டுள்ளமையினால் வைத்தியசாலை பராமரிப்பு சேவைகள் நடத்தி செல்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா நோயாளிகளை பராமரிப்பதன் காரணமாக வைத்தியசாலை ஊழியர்களை வாடகை வீடுகளை விட்டு வெளியேற்ற உரிமையாளர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளுக்கு அருகில் வாடகை வீடுகளில் வசிக்கும் இந்த ஊழியர்கள் தங்கள் கடமைகளுக்கு செல்வது கட்டாயமாகும்.

இவ்வாறான நேரத்தில் அவர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றுவது மிகவும் அநீதியான செயல் என வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

  • Recent
Scroll to top