இலங்கையில் இன்று மட்டும் 383 புதிய கொரோனா நோயாளிகள்

இன்றைய தினம் இதுவரையில் 383 கொவிட்-19 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.

இன்றைய தினம் கிடைக்கப் பெற்ற பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இறுதியாக கிடைக்கப் பெற்ற பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் மேலும் 170 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி இலங்கையில் மொத்தமாக 12750 கொவிட்-19 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.

இதுவரையில் இலங்கையில் கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக 29 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • Recent
Scroll to top