கொரோனா காலத்திலும் யாழில் குறையாத வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் – திருநெல்வேலிப் பகுதியில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவமானது நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

திருநெல்வேலி அம்மன் கோவில் பகுதியிலுள்ள வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாதோர் இந்த வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது வீட்டிலிருந்த வயோதிபரின் இரு கைகளையும் குறித்த நபர்கள் வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட வயோதிபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

  • Recent
Scroll to top