அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித தட்டுபாடும் இல்லை – அமைச்சர் பந்துல குணவர்தன

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்றைய தினம் புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களின் நடவடிக்கைகளை அவதானிக்க சென்றார். இதன் போது இவ்வாறு கூறினார்.

புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களில் தற்போது உள்ள அத்தியாவசிய பாவனை பொருட்களை சுட்டிக்காட்டி அவர் மேலும் தெரிவிக்கையில் அரிசி, மா, சீனி, பருப்பு, கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் மொத்தமாக பெறக்கூடிய அளவில் சந்தையில் உண்டு. கலஞ்சியசாலைகளிலும் இவை பெருமளவில் உண்டு என்று தெரிவித்தார்.

பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து பொருட்கள் கொள்வனவை மேற்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சிறப்பான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு அமைவாக தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

  • Recent
Scroll to top