இலங்கையில் 24ஆவது கொரோனா மரணம் – பெண் உயிரிழப்பு

இலங்கையில் 24 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு-13 பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவர் நேற்றைய தினம் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். எனினும் அவருக்கு மேற்கொண்ட பிசீஆர்

இந்த பெண் ஒரு மாதத்திற்கு மேலாக சுகயீனமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், அவர் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமையினால் ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த மரணம் இலங்கையின் 24வது கொரோனா மரணமாக உறுதி செய்யப்பட்டுள்ளதென அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Recent
Scroll to top