நாட்டில் கொரோனா தீவிரம்! கல்வி அமைச்சு எடுத்துள்ள புதிய தீர்மானம்

பாடசாலை மாணவர்களுக்காக புதிய தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தரம் 3 முதல் 13ஆம் தரம் வரையான பாடசாலை மாணவர்களுக்காக இந்த தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ளது.

அதற்கமைய அரச மற்றும் தனியார் தொலைகாட்சி மற்றும் வானொலி சேவையின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த செயற்பாட்டுக்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்திற் கொண்டு மாணவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில்

பத்தரமுல்லையில் பல அரச நிறுவனங்கள் இயங்கும் இசுருபாய கட்டடத்தினை மறு அறிவித்தல் விடுக்கும் வரை மூட சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இசுருபாய சூழலில் கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இசுருபாயவில் கல்வியமைச்சு உட்பட பல அரச நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

  • Recent
Scroll to top