க.பொ.த (உ/த) பரீட்சையில் 2C,S இற்கு மேல் இருந்தாலே இலங்கையில் வைத்தியராக முடியும்

இலங்கை மருத்துவ சபையில், ஒருவர் வைத்தியராக பதிவு செய்து கொள்வதற்கான அடிப்படை தகைமைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரமளித்துள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் ஒழுங்கு விதிகள், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இன்று முற்பகல் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்வதற்கு, வைத்திய மாணவர் ஒருவர், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், குறைந்தபட்சம் 2 C, ஒரு S சித்தியைப் பெற்றிருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த ஒழுங்கு விதிகளுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • Recent
Scroll to top