20ம் திருத்தச்சட்டம் வந்தவுடன் சுடச் சுட அமைச்சராகவுள்ள பஸில் ராஜபக்‌ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தின் போது பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக தெரியவருகிறது.

பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க வசதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கோட்டேகொட தனது பதவி விலகல் கடிதத்தை ஏற்கனவே கையளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

  • Recent
Scroll to top