தற்போது இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் தொடர்பிப் சற்றுமுன் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

இலங்கையில் இரண்டாவது முறையாக பரவி வரும் கொரோனா வைரஸ் வகையானது மிக வேகமாக பரவக் கூடியது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த முறை கொரோனா வைரஸ் பரவிய போது கொரோனா தொற்றாளர் ஒருவரின் தும்மல் மற்றும் இருமலில் இருந்து வெளியே எச்சிலில் ஒரு லட்சம் வைரஸ் இருந்திருக்குமாயின், அது தற்போது மில்லியன், பில்லியன் எண்ணிக்கையாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறு நீரக நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து அதிகம் இருப்பதால், அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால், 011-7966366 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் சுகாதார அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Recent
Scroll to top