பெண்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கஜாலின் திருமண உடைகள்

மிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவை அக்டோபர் 30 ஆம் தேதி திருமணம் செய்யவிருப்பதாக அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நடிகை காஜல் அகர்வாலின் திருமணம் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக காஜல் அகர்வாலின் திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் அழைத்து மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. கீழே காஜல் அகர்வாலின் திருமணத்திற்கு முன் நடந்த ஹால்டி விழா (மஞ்சள் விழா) மற்றும் மெஹந்தி விழா முதல், திருமணம் வரை எடுக்கப்பட்ட போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது திருமணத்திற்கு முன் காஜல் அகர்வால் தசரா வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது தனது துணையுடன் சேர்ந்து எடுத்து வெளியிட்ட முதல் போட்டோ. இதில் காஜல் அகர்வால் டிசைனர் அர்பிதா மெஹ்தாவின் எம்பிராய்டரி செய்யப்பட்ட கராரா உடை அணிந்திருந்தார். இந்த நீல நிற போல்கா டிசைன் கொண்ட உடை காஜல் அகர்வாலின் அழகை மேம்படுத்திக் காட்டியது.

மெஹந்தி விழா இது காஜல் வெளியிட்ட திருமணத்திற்கு முன் நடந்த மெஹந்தி விழாவின் போது எடுத்து போட்டோ. இதில் இவர் தனது கைகளுக்கு மெஹந்தி போட்டு, நடனம் ஆடுவது போன்று போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த மெஹந்தி விழாவிற்கு காஜல் டிசைனர் அனிதா டாங்ரே வடிவமைத்த உடையை அணிந்திருந்தார். இந்த பச்சை நிற ஸ்லீவ்லெஸ் சராரா குர்தா செட்டின் விலை ரூ. 24,500. இந்த உடைக்கு பெரிய கோல்டன் காதணிகளை அணிந்திருந்தார்.

இது காஜல் அகர்வாலின் ஹால்டி விழா என்னும் மஞ்சள் விழாவின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள். இந்த விழாவின் போது காஜல் மஞ்சள் நிற உடை அணிந்து, மலர் டிசைனைக் கொண்ட ஆபரணங்களை அணிந்து அழகாக காட்சியளித்தார். அதோடு கல்யாண பூரிப்பு காஜல் அகர்வாலின் முகத்தில் நன்கு வெளிப்பட்டது என்று கூட சொல்லலாம்.

பிங்க் அனார்கலி சூட்

இது தனது திருமணத்திற்காக வீட்டில் இருந்து கிளம்பும் போது எடுத்த போட்டோ. காஜல் அப்போது நீளமான குர்தா மற்றும் பைஜாமா அடங்கிய அடர் பிங்க் நிற அனார்கலி சூட் அணிந்திருந்தார்.

திருமணத்திற்கு முன்பான போட்டோசூட்

இது திருமணத்திற்கு முன் துணையுடனான போட்டோசூட்டின் போது எடுத்தது. இந்த ஒரு போட்டோ அவர்களுக்கு இடையே உள்ள காதலை வெளிக்காட்டுகிறது எனலாம். உண்மையிலேயே ஜோடி பொருத்தம் சூப்பராக உள்ளது.

இது திருமணத்திற்கு ரெடியாகும் போது, தனது திருமண உடையை அணிவதற்கு தயாராக இருப்பதை காட்டும் வகையில், நாற்காலியில் அமர்ந்து மேலே ஒரு வெள்ளை நிற டவலைப் போர்த்தியவாறு எடுத்த போட்டோ. இதை காஜல் தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்து கொண்டார்.

காஜல் திருமண போட்டோ

இது காஜல் அகர்வாலின் திருமணத்தின் போது எடுத்த போட்டோக்கள். அதில் காஜல் அகர்வால் தனது திருமணத்தின் போது சிவப்பு மற்றும் கோல்டன் நிற லெஹெங்காவை அணிந்திருந்தார். கவுதம் கிட்சுலு வெள்ளை நிற ஷெர்வானியை அணிந்திருந்தார்.

  • Recent
Scroll to top