சற்று முன்னர் மேலும் 102 பேருக்கு கொரோனா..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 102 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 21 பேருக்கும் நோயாளர்களுடன் தொடர்பினை பேணிய 81 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்..

கொவிட் 19 தொற்றுறுதியான காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் பொரளை காவற்துறையின் 7 அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

அதேநேரம் 300 காவல்துறையினர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தொற்றுறுதியானவர்கள் அடையாளங்காணப்பட்ட அனைத்து காவல்துறை நிலையங்களும் உரிய முறையில் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவற்றின் சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே பொது மக்கள் அச்சமின்றி காவல்துறை நிலையங்களுக்கு பிரவேசிக்க முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • Recent
Scroll to top