இலங்கையில் குடிகாரர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி

வியாபாரம் குறைந்துவிட்டமை காரணமாக மதுபானசாலைகளை தற்காலிகமாக மூட அனுமதி கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் கபில குமாரசிங்க ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் மூன்று நாள் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்படுவதற்கு முன்னதான காலப்பகுதியில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலத்தில் மதுபான விற்பனையில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தாம் நட்டங்களை எதிர்கொள்வதாகவும், மதுபான கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த வியாபாரக் குறைவுக்கு சட்டவிரோத மதுபானங்களின் விற்பனையே காரணமாக இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகவும் குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சட்டப்படி மதுபானசாலைகளை அனுமதியின்றி மூடுவது சட்டவிரோதமாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த மதுபானசாலைகளை நிரந்தரமாகவே மூட வேண்டியேற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • Recent
Scroll to top