பொதுச் சுகாதார பரிசோதகர் வேடதாரியால் நிகழ்ந்த பரிதாபம்

பொது சுகாதார பரிசோதகர்கள் போல் வேடம் தரித்து மூன்று பேர் வீடொன்றில் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று அம்பான்பொல பகுதியில் பதிவாகியுள்ளது.

குறித்த கொள்ளை சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் அம்பான்பொல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்று வீட்டில் உள்ளவர்களிடம் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதாக கூறி போதைப்பொருள் கொடுத்து பின்னர் வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • Recent
Scroll to top