சற்றுமுன் கிடைத்த அதிர்ச்சி தகவல் – மேலும் 319 பேருக்கு கொரோனா..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 319 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 83 பேருக்கும், நோயாளர்களுடன் தொடர்பினை பேணிய 236 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும்..

கிரிஉல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இன்று திடீரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பன்னல ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய இளம் பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண் வீட்டில் இருந்த போது வயிறு மற்றும் நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் மயங்கி விழுந்த பெண்ணை உறவினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் PCR பரிசோதனைக்கு உட்படுத்தும் நோக்கில் சடலம் குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த பெண் கடந்த 18ஆம் திகதி மேற்கொண்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • Recent
Scroll to top