மகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்!

வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தால், பெட்ரூமில் மகளுடன் இளைஞர் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றார் பெற்ற தாய்! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வசித்து வருகிறார் அந்த இளம்தாய்.. இவர் ஒரு விதவை.. 15 வயது மகளுடன் தனியாக ஒரு வீடு எடுத்து வசிக்கிறார்.

மகளுக்கு விருதாச்சலம் அருகே உள்ள மகேந்திர நல்லூரை சேர்ந்த ஜெயக்குமார் என்ற இளைஞர் அறிமுகமானார்.. இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளது.. ஜெயக்குமாருக்கு 19 வயசாகிறது.. நாளடைவில் சிறுமியிடம் ஆசையாக பேசி காதலில் விழ வைத்தார்.

அந்த பெண் அட்ரஸ் தந்துவிடவும், சிறுமியின் அம்மா வீட்டில் இல்லாதபோதெல்லாம் அங்கு சென்று வந்துள்ளார்.. பாலியல் சீண்டலிலும் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார். அப்படித்தான் சம்பவத்தன்றும், அம்மா வெளியே சென்றுவிட்டார்.. வழக்கம்போல் காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் சிறுமி.. வழக்கம்போல் ஜெயக்குமாரும் எல்லை மீற முயன்றார்.

வெளியே சென்றிருந்த அம்மா திடீரென உள்ளே நுழைந்து விட்டார்.. அங்கே மகள் யாரோ ஒரு இளைஞனுடன் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ந்து போய்விட்டார். அம்மாவுக்கு மேல் இப்போது ஜெயக்குமார் அதிர்ச்சி ஆனார்.. உடனே அந்த அம்மாவை வெளியில் தள்ளி கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார்.. வீட்டுக்குள் சிறுமியும் ஜெயக்குமாரும் இருக்க, அம்மா வெளியே நின்று சத்தம் போட்டார்.

அவரது சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.. கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர்.. பதுங்கி கொண்டிருந்த ஜெயக்குமாரை இழுத்து பிடித்து வைத்து கொண்டு, சிதம்பரம் போலீசாருக்கு தகவலை சொன்னார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து, சிறுமியையும் ஜெயக்குமாரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

அங்கு ஜெயக்குமாரிடம் துருவி துருவி விசாரணை நடந்தது.. அவரது செல்போனை வாங்கி போலீசார் ஆய்வு செய்தபோதுதான், ஜெயக்குமாரின் வண்டவாளம் மேலும் வெளியே வந்தது.. இதேபோல, பல பெண்களுடன் பழகி ஏமாற்றி உள்ளார்.. எல்லாருமே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானவர்களாம்.. எல்லாருமே சிறுமிகள்தானாம்.

அதேபோல, வீட்டுக்கு சென்று பெட்ரூமில் படுத்து கொண்டே போட்டோக்களை எடுத்து வைத்து, கூகுள் டிரைவில் பத்திரமாக வைத்திருக்கிறார். இதை பார்த்து மிரண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயக்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்… நாளுக்கு நாள் இளம்பெண்கள் இப்படி இன்ஸ்டாவில் தங்கள் வாழ்க்கையை தொலைப்பதும், காமகொடூரர்களின் கையில் சிக்கி நாசம் ஆவதும் அதிகரித்தபடியே வருவது கவலை அளிப்பதாக உள்ளது!

  • Recent
Scroll to top