க.பொ.த (உ/த) வணிகப்பிரிவு மாணவர்களுக்கு மகிழ்ச்சிதரும் செய்தி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளைய தினம் நடத்தப்படவுள்ள கணக்கியல் பாடத்தின்போது பரீட்சாத்திகளுக்கு நிரல்படுத்தப்படாத கணிப்பானை (Calculaer) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி வழங்குவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.

எனினும் கைக்கடிகாரங்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் பிற மின்னணு தொடர்பு சாதனங்களை பரீட்சை மண்டபங்களுக்கு கொண்டு செல்வது தடைசெய்யப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

உள்ளூர் பரீட்சைகள் வரலாற்றில் முதல் முறையாக இந்த வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

  • Recent
Scroll to top