அலி-எக்ஸ்பிறஸ் இல் பொருட்களின் வருகைக்காக காத்திருக்கும் வடமாகாண மக்கள் கவனத்திற்கு!

இலங்கையில் வடபகுதிக்கான தபால்கள் மற்றும் பொதிகள் அனைத்தும் வவுனியா தபால் நிலையத்தில் தேங்கியுள்ள நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் 19 பரம்பலைத் தொடர்ந்து தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் வடபகுதிக்கான தபால்கள் அனைத்தும் வவுனியா தபால் நிலையத்தில் தேங்கி கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்பகுதிக்கான தபால்கள் அனைத்தும் வவுனியாவில் இருந்து அனுப்பப்படுகின்ற போதிலும் வட பகுதிக்கான தபால்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படாமல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வவுனியாவிற்கான தபால்கள் விநியோகிக்கப்பட்டு வந்தாலும் ஏனைய வடபகுதிற்கான விநியோகங்கள் தடைபட்டிருக்கின்றது.

வாகன வசதிகள் இருக்கின்ற போதும் தபால்கள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Recent
Scroll to top