ஆனையிறவு பகுதியில் கோர விபத்து! தாயும், மகனும் பரிதாபமாக பலி

கிளிநொச்சி ஏ-09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்றிரவு ஏழு மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

  • Recent
Scroll to top