எந்த ராசி பெண்கள் கணவரிடம் பாசமும் நேசமும் பொழிவார்கள் தெரியுமா?

கல்யாணம் பண்ணியும் சிலர் பிரம்மசாரிகளாக இருப்பார்கள். சிலர் வீட்டிலோ கணவன் மனைவிக்கான நெருக்கமும் அந்நியோன்யங்கள் இல்லாமல் ஏதோ கடமைக்காக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இதற்குக் காரணம் சரியாக பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து வைத்திருப்பதுதான். ஆணோ, பெண்ணோ தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை கஷ்டமோ நஷ்டமோ கடைசி வரைக்கும் கை பிடித்து கூட நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள். வரன் பார்க்கும் போதே சில ராசிக்களில் பிறந்த பெண் அமைந்தால் விட்டு விட வேண்டாம் உடனே ஓகே சொல்லி திருமணம் செய்து விடுங்கள் அந்த வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

சிலருக்கு மட்டுமே மனைவி கடவுள் கொடுத்த வரமாக அமையும் சிலருக்கு சாபமாக அமைந்து விடும். தேவ குணம், மனித குணம் இல்லாமல் ராட்சஸ குணம் அதிகம் கொண்டவர்கள் வாழ்க்கை துணையாக அமைந்து விட்டால் அவ்வளவுதான் காலம் பூராவும் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

சில ராசி நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே தேவ குணம் கொண்டவர்களாகவும் மனித குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அத்தகைய ராசி, நட்சத்திரங்களில் பிறந்த பெண் உங்களை தேடி வந்தால் கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் விட்டு விட வேண்டாம். மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசியில் பிறந்த பெண்கள் கணவரிடம் பாசமும் நேசமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

கீழே அடுத்த அடுத்த இலக்கங்களை சொடுக்குவதன் மூலம் தொடர்ந்து வாசியுங்கள்.

Pages: 1 2 3 4 5 6 7 8
  • Recent
Scroll to top