பச்சை குத்தியவர் தசை உண்ணும் கிருமிகளால் மரணம்

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸை சேர்ந்த வாலிபர் ஒருவர் சமீபத்தில் காலில் பச்சை குத்திக் கொண்டார். பச்சை குத்திய சில நாட்கள் கழிந்த நிலையில் அவரது காலில் பயங்கரமான வலி ஏற்பட்டது. எனவே, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது உடலில் உயிர் கொல்லி தொற்று கிருமி பரவி இருந்தது தெரிய வந்தது. இந்த வகை கிருமிகள் மெக்சிகோ வளைகுடா கடல் நீரில் அதிகமாக காணப்படுகின்றன. இந்த கிருமி உடலில் புகுந்து விட்டால் அவை மனிதனின் தசையை சாப்பிட்டு உயிர் வாழும். இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உயிரை பறித்து விடும். இந்த கிருமிதான் இவருடைய உடலிலும் புகுந்து இருந்தது. சிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியாத அளவுக்கு அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. எனவே, சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அவர் உயிர் இழந்தார். இவர் பச்சை…

Read More

பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள பிருத்தானிய பவுண்ட்

பிரித்தானிய பவுண்டின் மதிப்பு 8 மாதங்களில் பாரிய சரிவை தற்போது சந்தித்துள்ளதாக இன்று காலை வெளியாகிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டொலர் மற்றும் யூரோவுக்கு எதிராக பிரித்தானிய பவுண்டடின் பெறுமதி 2 வீதத்தில் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது. பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலுக்கான பெறுபேறுகள் வெளியாகி வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு அமைய பிரதமர் தெரேசா மேயின் கட்சிக்கு ஆட்சி அமைக்க தேவைாயன பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து வர்த்தக சந்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பவுண்டின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் திட்டம் இனி என்னவாகும் என்ற கேள்விகள் எழுந்த நிலையில், யூரோவுக்கு எதிரான பிரித்தானிய பவுண்டின் பெறுமதி கிட்டத்தட்ட 2 வீதத்தில் குறைவடைந்துள்ளது. இதேவேளை, அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் போது, பவுண்டின்…

Read More

பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை! பிரித்தானிய பிரதமர்

தனது பதவியை இராஜினாமா செய்யும் எண்ணமில்லை என பிரித்தானியா பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியா பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஆளும் கட்சியான Conservatives கட்சி 319 ஆசனங்களை பெற்றுள்ளது. இதனையடுத்து, அங்கு தொங்கு பாராளுமன்ற அமைப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய பிரதமரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட தொழில் கட்சிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த ஏகோபித்த ஆதரவு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் தொழில் கட்சி 261 ஆசனங்களை பெற்றிருந்தது. இதனைடுத்து பிரித்தானிய பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தொழில்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பி கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

லண்டன் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் யார்? – தகவல் வெளியானது

லண்டன் மாநகர பாலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்று, அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து, தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் லண்டன் பாலத்தில் நடந்து சென்ற பாதசாரிகள் மீது, வாகனத்தை மோதியும், கத்தியால் குத்தியும், கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில், 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 40க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள் 3 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதில், ஒரு தீவிரவாதி பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என, அடையாளம் தெரியவந்துள்ளது. இதுபற்றி தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், லண்டன் தீவிரவாத சம்பவத்தில் தொடர்புடைய ஒரு தீவிரவாதியின் பெயர் அபிஸ் என்றும், அவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன்…

Read More

லண்டனில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் – படங்கள் இணைப்பு

லண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர் என்று லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர். இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப் போலிசார் கூறியிருக்கின்றனர். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது. மூன்று பேர் இந்த லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடியதை தான் பார்த்ததாக பிபிசியிடம் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார்.சாலையில் பலரை அவர்கள் கத்தியால் குத்தினர் என்று அவர் கூறினார். அதற்கு சற்று நேரத்திற்குப் பின், ஆயுதந்தாங்கிய போலிசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன. இந்த்த் தாக்குதல்கள் கோழைத்தனமானவை , வேண்டுமென்றே நடத்தப்பட்டவை என்று லண்டன் மேயர் சாதிக் கான் கண்டனம் செய்திருக்கிறார். இத்தகைய…

Read More

அமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை

அமெரிக்கா செல்வோர் விசா பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா விசாவை பெற்றுகு்கொள்ள எதிர்பார்த்திருக்கும் அவர்கள் கடந்த 5 வருடங்களில் பயன்படுத்திய சமூகவலைத்தள பெயரை வெளிப்படுத்த வேண்டும். இந்த புதிய நடைமுறை அமெரிக்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், இது கட்டாயமாக்கப்படும். இதற்கான அனுமதியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளது. புதிய நடைமுறைக்கு அமைய விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர், கடந்த 5 வருட காலத்தில் பயன்படுத்திய சமூக ஊடகங்கள் தொடர்பான தகவல், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி இலக்கங்கள் தொடர்பில் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், கடந்த 15 வருடங்களாக அவர் வசித்த முகவரி, தொழில், பயண விவரங்கள் உள்ளிட்டவற்றையும் தெரிவிக்க வேண்டும். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவ்வாறான சட்டம் நடைமுறைக்கு வருவதாக அமெரிக்க…

Read More

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் தென் கிழக்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவின் தென்கிழக்கே சுலேவாசிய தீவில் உள்ள பாலு தீவு பகுதியில் கடலுக்கு அடியில் 130 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. உயிர் சேதம் குறித்து தகவல்கள் தெரியவில்லை.

Read More

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு ரஸ்ய ஜனாதிபதி இரங்கல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இரங்கல் வெளியிட்டுள்ளார். மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றத்தினால் இலங்iகியல் ஏற்பட்டுள்ள அழிவுகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையில் 122 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 97 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், சொத்துக்களுக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாகவும், பாதிக்கப்பட்டோருக்காக பிரார்த்தனை செய்வதாகவும் ஜனாதிபதி புட்டின் உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.

Read More

பிரான்ஸ் ஜனாதிபதியைப் பார்த்து இப்படி சொல்லிய அமெரிக்க ஜனாதிபதி!

உங்களின் வெற்றி குறித்து தான் இன்று உலகம் பேசிக் கொண்டிருக்கிறது என பிரான்ஸ் நாட்டின் இளம் ஜனாதிபதி இமானுவேல் மக்ரானை புகழ்ந்து பாராட்டியிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புதிதாக தெரிவு செய்யப்பட்ட அந்நாட்டின் இளம் ஜனாதிபதி இமானுவேல் மக்ரானை சந்தித்து பேசியிருந்தார் இதன் போது கருத்து வெளியிட்ட ட்ரம்ப், இந்த உலகமே உங்கள் வெற்றியை பற்றி பேசுகிறது. ஆச்சியர்யப்படும் வகையில் பிரச்சாரம் நடத்தினீர்கள். மிகப்பெரிய வெற்றியாக இருந்தது உங்கள் வெற்றி என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். இச் சந்திப்பில், தீவிரவாதம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

Read More