விடிய விடிய குடித்தும் போதை ஏறாததால் ஆத்திரம்

லண்டனில் 7 இலட்சம் ரூபாய்க்கு மது அருந்தியும் போதை ஏறவில்லை என நட்சத்திர விடுதி மீது சீன எழுத்தாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். லண்டனின் “வால்தாஸ் ஆம் ஸீ” என்ற நட்சத்திர விடுதி விலையுயர்ந்த உயர் ரக மது வகைகளுக்கு மிகவும் பிரபலமானது. இவ் விடுதியில் ஆரம்ப கட்ட மதுவின் விலை 2 இலட்சம் ரூபாவாகும். பணக்காரரான குறித்த சீன எழுத்தாளர் 1878 இல் தயாரிக்கப்பட்ட பாரம்பரியமான மதுவை பல இடங்களிலும் தேடியுள்ளார் இறுதியில் லண்டனில் குறித்த நட்சத்திர விடுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றுள்ளார். அதன் விலை 7 இலட்சம் ரூபாவாகும். குறித்த சீன எழுத்தாளர் மது மொத்தத்தையும் விடிய விடிய குடித்தும் அவருக்கு போதை ஏறாமல் இருக்க ஆத்திரமடைந்த எழுத்தாளர் தனக்கு போலியான மதுவை, அதிக விலைக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என பொலிஸ் நிலையத்திற்கு…

Read More

அமெரிக்க விசா லொத்தர் தொடர்பாக மிக முக்கிய அறிவித்தல் ஒன்று

தொழில்நுட்ப இடர்கள் காரணமாக 2019ஆம் ஆண்டுக்கான பல்வகைமைப்பட்ட விசா (Green Card) நிகழ்ச்சி, விண்ணப்பக்காலம்நாளை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. புதிய நிகழ்ச்சியின்படி, ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2019 பல்வகைமைப்பட்ட விசா நிகழ்ச்சியில் பரிசீலிக்கப்படாது. இதன்காரணமாக ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் மீண்டும் தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளனர். இதன்படி நாளை ஒக்டோபர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள விண்ணப்பக்காலம் எதிர்வரும் நவம்பர் நவம்பர் 22ஆம் திகதி இரவு 10 மணிக்கு முடிவடையவுள்ளது. புதிய பதிவுக்காலத்தில் மற்றும் ஒரு பிரவேச விண்ணப்பம் அனுப்பிவைக்கப்படவேண்டும். இந்தநிகழ்ச்சி தொடர்பான அறிவுறுத்தல்களை ஐக்கிய அமெரிக்க ராஜாங்க திணைக்கள இணைத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

Read More

மகனை வைத்தே தாயை பகீரங்கமாக கற்பழிக்க வைத்து கொடூர கொலை

கொங்கோ குடியரசில், அரசுக்கு எதிரான போராளிகளுக்கு உணவளித்த குற்றத்துக்காக, பெண்ணொருவர் அவரது மகனாலேயே வலுக்கட்டாயமாக, அதுவும் பகிரங்கமாக பாலுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். குறித்த பெண் உணவகம் ஒன்றை நடத்தி வந்தவர். அங்கு, அரசுக்கெதிரான போராளிகள் சிலர் உணவருந்திச் சென்றுள்ளனர். இதையறிந்த ஒரு கும்பல், கடைக்குள் இருந்த அந்தப் பெண்ணையும், அவரின் கணவரது மற்றொரு மனைவியின் மகனையும் நிர்வாணப்படுத்தியபின் பொது இடத்துக்கு இழுத்து வந்தனர். பின்னர், அவர்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கியபின், அவரது மகனைக் கொண்டே அந்தப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தினர். அதன்பின், இருவரது தலைகளையும் வாளால் துண்டித்துப் படுகொலை செய்தனர். இச்சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் எட்டாம் திகதியே இடம்பெற்றுள்ளபோதும், இது குறித்த காணொளி ஓரிரு நாட்களுக்கு முன்னரேயே இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

Read More

கனடாவில் குடியுரிமை பெற உள்ளீர்களா? – உங்களுக்கு மகிழ்ச்சியான ஓர் செய்தி

சீரமைக்கப்பட்ட கனடிய குடியுரிமை அமைப்பின் புதிய தேவைகள் அக்டோபர் 11லிருந்து வருகின்றது. குறுகிய கால வதிவிட தேவை மற்றும் மொழி மற்றும் அறிவு சோதனைக்கான புதிய தேவைகள் இவற்றில் அடங்குகின்றன. நிரந்தர குடியிருப்பாளர்கள் கடந்த ஐந்து வருடங்களில் மூன்று வருடங்கள் கனடாவில் வசித்திருந்தால் இவர்கள் கனடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். குடிவரவு அமைச்சர் Ahmed Hussen- ஆல் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் பிரகாரம் 55 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகள் மொழி மற்றும் அறிவு பரீட்சைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவர். இந்த மாற்றங்கள் வருங்கால விண்ணப்பதாரர்களிற்கு ஒரு வரவேற்க கூடிய செய்தியாக அமையும். குடியுரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹாப்பர் அரசாங்கம் வதிவிட தகைமை கால எல்லையை அதிகரித்ததை தொடர்ந்து-குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பதாரி கனடாவில் ம்று வருடங்களில் நான்கு வருடங்கள் தொடர்ந்து வசித்திருக்க வேண்டும்- விண்ணப்பங்களின் எண்ணிக்கை சரிவடைய…

Read More

தமிழரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள சிங்கப்பூர் சம்பவம்

சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசியன் பைட்டிங் சாம்பியன் ஷிப் (Fighting Championship) குத்துச்சண்டை போட்டி கடந்த சனிக்கிழமை சிங்கபூரில் நடைபெற்றுள்ளது. இப்போட்டியில் பிரபலமான வீரரான ஸ்டீவன் லிம் என்பவர் பங்கேற்க இவரை எதிர்த்து தமிழரான பிரதீப் சுப்ரமணியன் பங்கேற்றுள்ளார். போட்டி தொடங்கியதும் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். அப்போது, பலத்த தாக்குதலுக்கு உள்ளான பிரதீப் மேடையிலேயே சரிந்து விழுந்துள்ளார். இதன்போது, பிரதீப்பை அருகில் உள்ள பிரபல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து விளையாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறும் போது, ‘விளையாட்டு தொடங்குவதற்கு முன்னதாக இருவரிடமும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், விளையாட்டு போட்டியில் பங்கேற்க இருந்த வீரர் விலகி கொண்டதால் குறுகிய காலத்தில் அந்த இடத்தில் பிரதீப் விளையாட…

Read More

ஆங் சாங் சூச்சியின் பேச்சு: உலக தலைவர்கள் விமர்சனம்

மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சாங் சூச்சி, ரக்கைன் மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளையும், ரோஹிஞ்சா அகதிகள் பிரச்சனையையும் கையாளும் விதம் குறித்து, அதிகப்படியான சர்வதேச அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளார். செவ்வாயன்று ஆற்றிய ஓர் உரையில், மியான்மரின் தலைவர், உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனாலும், ராணுவத்தின் மீது எந்த பழியும் கூறவோ, இன சுத்திகரிப்பு குறித்த குற்றச்சாட்டுகள் குறித்தோ பேசவில்லை. அவரின் நிலைப்பாடு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக, பல தலைவர்களும், தூதர்களும் கூறியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நான்கு லட்சம் ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்திற்கு சென்றுள்ளனர். கடந்த மாதம் ரக்கைன் மாநிலத்தில் உள்ள காவல் சாவடிகள் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலே அண்மை காலத்தில் உள்ள அமைதியின்மைக்கு காரணமாக கூறப்படுகிறது. இதற்கு புதிதாக உருவெடுத்துள்ள ரோஹிஞ்சா குழுவான அர்சா எனப்படும் அரக்கன் ரொகிஞ்சா சால்வேஷன் ஆர்மி தான் காரணம்…

Read More

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் உயர்வு

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இருந்த விலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3 டொலரினால் உயர்வடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய உலக சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 312 டொலரினால் பதிவாகியுள்ளது.

Read More

பெற்றோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடித் தடை

பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்கள் விற்பனையை சீனா தடை செய்து உள்ளது. எனவே அங்கு மின்சார கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காற்றில் கார்பன் டை ஆக்சைட் அதிக அளவில் கலப்பதால் மாசு ஏற்பட்டு பருவ நிலை மாற்றம் உருவாகியுள்ளது. இது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளன. கார்பனை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளின் படடியலில் சீனாவும் இடம் பெற்றுள்ளது. அங்கு அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக அங்கு பெற்றோல் மற்றும் டீசல் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் தடை செய்யப்பட உள்ளன. உலக அளவில் அதிக அளவில் பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா உள்ளது. தற்போது இவற்றை தடை செய்வதன் மூலம்…

Read More

13 வயது சிறுமி ஒருவரின் உடல் உறுப்புகள் 8 பேருக்கு தானம்

மூளை ரத்த நாள வீக்கத்தால் இறந்த 13 வயது சிறுமி ஒருவரின் உடல் உறுப்புகள் 8 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் உடல் உறுப்புகள் அதிகமானோருக்கு தானம் செய்யப்ப்பட்டிருக்கும் வரலாற்று பதிவு இதுதான். சோமர்செட்டில் வாழ்ந்த ஜெமிமா லேஸெல் 2012 ஆம் ஆண்டு இறந்தார். அவருடைய இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம், சிறு குடல் மற்றும் கல்லீரல் உறுப்புகள் 5 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளன. ஜெமிமா மிகவும் புத்திசாலி, இரக்க குணமுடையவர் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர் என்று தெரிவித்திருக்கும் அவருடைய பெற்றோர், அவர் விட்டு சென்றுள்ளதை நினைத்து மிகவும் பெருமைப்பட்டிருப்பார் என்று தெரிவித்திருக்கின்றனர். இதுவரை செய்யப்பட்ட உறுப்புகள் தானத்தில் இவ்வளவு அதிகமானோருக்கு ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் பயன்பட்டதில்லை என்று ஐக்கிய ராஜ்ஜிய தேசிய சுகாதார சேவை தெரிவித்திருக்கிறது.

Read More

ஃபேஸ்புக் மூலம் உதவி கேட்ட கற்பழிக்கப்பட்ட இளம்பெண்

பிரிட்டனை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு கொலை செய்ய முயன்ற ஒருவனிடம் இருந்து தப்பி ஃபேஸ்புக் மூலம் உதவி கேட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் தங்கியிருந்தார். அவருடன் தங்கியிருந்த மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரை கொலை செய்ய கத்தியால் கையில் குத்தியுள்ளார். இந்த நிலையில் கொலைகாரனிடம் இருந்த தப்பிய அந்த பெண், ஒரு அறைக்கு சென்று உள்ளே பூட்டிய பின்னர் ஃபேஸ்புக்கில் தனது காயங்களுடன் கூடிய படத்தை பதிவு உதவி கேட்டார். அவருக்கு அவசர உதவி எண், போலீஸ் எண் ஆகியவை தெரியாததால் அவர் ஃபேஸ்புக்கின் உதவியை நாடியுள்ளார். இதுகுறித்து அவரது நண்பர்கள் ஆஸ்திரேலிய போலீசின் கவனத்துக்கு கொண்டு சென்றதால் உடனடி நடவடிக்கை…

Read More